-->

Friday, 20 August 2021

author photo

kodaiyidai thambapillai, miruthanga kalaignar, tamil musician @lyricstamil.net
Thambapillai

Miruthangam Thambapillai was born on 1905 in Yazhpanam. He from Navanthurai, Yazhpanam. He learnt miruthangam from kodaiyidi Mayilvaganam.

மிருதங்கம்‌ தம்பாபிள்ளை

மிருதங்கம்‌ தம்பாபிள்ளை அவர்கள்‌ யாழ்ப்‌பாணத்திற்கு அருகிலுள்ள நாவாந்துறை என்னும்‌ ஊரைச்‌ சேர்ந்தவர்‌. இவர்‌ 1920 ஆம்‌ ஆண்டளவில்‌ ஆனைக்கோட்டை கோடையிடி மயில்வாகனம்‌ அவர்‌களிடம்‌ மிருதங்கக்கல்வி பயின்றதாக அறிகின்‌றோம்‌. ஐந்து ஆண்டுகள்‌ வரை அவரிடம்‌ பயின்று நன்கு சாதகம்‌ செய்து இசை நிகழ்ச்சிகளுக்கு மிருதங்கம்‌ வாசிக்க. ஆரம்பித்து விட்டார்‌.

 

எனினும்‌ அக்காலத்தில்‌ யாழ்ப்பாணத்தில்‌ கர்நாடக இசைக்‌ கச்சேரிகள்‌ நடைபெறுவது அரிது. பெரும்பாலும்‌. கூத்துக்கள்‌, நாடகங்கள்‌, சதிர்க்கச்சேரி என்னும்‌. சின்னமேளம்‌, போன்ற இசைநிகழ்ச்சிகளே அதிகம்‌. இப்படியான நிகழ்ச்சிகளுக்கே அதிகம்‌ வாசிக்கும்‌ சந்தர்ப்பம்‌ தம்பாபிள்ளை அவர்களுக்கு கிடைத்தது.


கோடையிடி தம்பாபிள்ளை 

இவருடைய மிருதங்கவாசிப்பானது பாரிய நாதமுடையதாகவும்‌, வேகமுடைய சொற்பிரயோகம்‌ கொண்டதாகவும்‌ இருந்தது ஏன அறிகிறோம்‌. இதன்‌ காரணமாக இவருக்கும்‌ நாடக, நாட்டிய வாசிப்பின்‌ போது கோடையிடி தம்பாபிள்ளை என்கின்ற காரணப்‌ பட்டப்பெயர்‌ கிடைத்தது.

 

எனினும்‌ இவர்‌ தனது மிருதங்க வாசிப்பானது சுத்த கர்நாடக பாணியில்‌ அமைய வேண்டும்‌ என்று ஆர்வம்‌ கொண்டார்‌. இதன்‌ காரணமாக இவருடைய மகன்‌ இரத்தினம்‌ அவர்களை இந்தியகலையஞர்‌களின்‌ உதவியுடன்‌ தஞ்சை குற்றாலம்‌ சிவவடிவேல்‌ பிள்ளை அவர்களிடம்‌ மிருதங்கம்‌ பயில தமிழ்‌நாடு அழைத்துச்‌ சென்று குருகுலவாசம்‌ செய்து கற்கவைத்தார்‌.

 

மகன்‌ இரத்தினம்‌ அவர்களும்‌ சம்மிரதாயமூர்வமாக மிருதங்கம்‌ பயின்று கர்நாடக இசைக்கச்சேரிகளுக்கு மிருதங்கம்‌ வாசித்தும்‌, சிஷ்யர்களை உருவாக்கியும்‌, இலங்கை வானொலிக்‌ கலைஞராகவும்‌ 1995 பிப்ரவரி 9 வரை விளங்‌கிய இவர்‌ கலாகூரிபட்டம்‌ பெற்ற கலைஞர்‌ என்பது குறிப்பிடத்தக்கது.


கர்நாடக சங்கீத பாணி 

நாடக, நாட்டிய கலைப்படைப்புகளுக்கு மாத்‌திரமே பொருந்தும்‌ படியாக வாசித்து வரும்‌ வழக்கமுடைய தம்பாபிள்ளை அவர்கள்‌ தனது மகன்‌ இரத்தினம்‌ அவர்களை கர்நாடக சங்கீத பாணிக்கும்‌. வாசிக்கக்‌ கூடியவராக தகமைபெறச்‌ செய்தமை ஈழத்தின்‌ மிருதங்க இசை வளர்ச்சிக்கு உந்து சக்தியாக அமைந்த தென்றால்‌ மிகையாகாது.

 

மிருதங்க்கலை வளர்ச்சி பற்றி சிந்திக்கும்‌ போது நம் கலைஞர்‌ கோடையிடி தம்பாபிள்ளையை இலகுவில்‌ மறக்க முடியாது.

This post have 0 Comment

Comment your suggestion and review here!
EmoticonEmoticon

Next article Next Post
Previous article Previous Post