-->

Wednesday, 18 August 2021

author photo

kodaiyidi a.mayilvaganam, miruthangam mayilvaganam @lyricstamil.net
Kodaiyidi A. Mayilvaganam

Kodaiyidi A. Mayilvaganam was born on 16-12-1985 in Yazhpanam. Ambalam was a father of Mayilvaganam. Chinnathambi was his elder brother.

கலைஞனின் பிறப்பு

இம்‌மிருதங்கக்‌ கலைஞர்‌ 16-12-1895 இல்‌ பாழ்ப்பாணத்து ஆனைக்கோட்டைமில்‌ திரு. அம்பலம்‌ தம்பதியருக்கு துவிதிய புத்திரனாகப்‌ சிறந்தார்‌. இவருடன்‌ பிறந்த மூத்த சகோதரர்‌ சின்னத்தம்பி ஆவர்‌. சின்னத்தம்பி அவர்கள்‌ சுத்த மத்தளம்‌ போன்ற மிருதங்கத்தை நாடகங்களுக்கும்‌ கூத்துக்களுக்கும்‌ வாசித்து வந்தார்‌.

 

இதைப் பார்த்து. ஆவல்கொண்ட மயில்வாகனம்‌ அவர்கள்‌ தாமும்‌ மிருதங்கம்‌ வாசிக்கக்‌ கற்றுக்‌ கொள்ள வேண்டும்‌ என ஆசை கொண்டார்‌. ஆனால்‌ அக்காலத்திலே இந்திய நாடக க்‌ கலைஞர்களே யாழ்ப்பாணம்‌ வந்து நாடகம்‌ மேடையயேற்றிக்‌ கலைம்‌ பரிமாற்றம்‌ செய்து வந்தார்கள்‌.

 

அக்காலத்தில்‌ கடல்மார்க்கமாக வத்தையில்‌ இந்தியாவிற்கும்‌ யாழ்ப்பாணத்‌ திற்கும்‌ போக்குவரத்து சுலபமாக இருந்தது.

 

இதே காலத்தில்‌ கும்கோணம்‌ ராஜமாணிக்கம்பிள்ளை அவர்களது நாடகக்‌ குழுவந்து நாடக நிகழ்ச்சி அளித்து இந்தியா செல்கையில்‌. அக்குழுவினருடன்‌ மயில்வாகனம்‌ இந்தியா சென்று, அவர்களின்‌ வழிகாட்டலில்‌ மிருதங்கம்‌, ஹார்மோனியம்‌, டோலக்‌, தபேலா போன்ற வாத்தியங்களையும் ‌பயின்றார்‌. வாத்தியங்கள்‌ வாசிக்க‌ பயின்றது மட்டுமல்லாமல்‌ மேற்படி வாத்தியங்களின்‌ தயாரிப்பு, நுட்பவியல்களையும்‌ நன்கு கற்றார்‌.


கச்சேரிகள் 

திரு. மயில்வாகனம்‌ மிருதங்கத்தைப்‌ பயின்ற காலத்தில்‌ இலங்கையில்‌ மேடைக்‌ கலை நிகழ்ச்சிகள்‌ என நடைபெறுவது சதுர்க்கச்சேரி (சின்னமேளம்‌), காவடி நாடகம்‌ போன்றவைகள்தான்‌. எனவே இவ்வகை நிகழ்ச்சிகளில்‌ மிருதங்கம்‌, டோலக்‌, தபேலா போன்ற லய வாத்தியங்களை வாசித்து, இலங்கை இந்திய இசைக் கலைஞர்களினது நன்‌மதிப்பையும்‌ ரசிகர்களின்‌ பாராட்டுக்களையும்‌ பெற்‌றார்‌.

 

௮ப்பொழுது அவருக்கு ஏறக்குறைய 25வயது இருக்கும்‌ மயில்வாகனம்‌ அவர்களுடைய கலைச்‌சேவைக்‌ காலத்தில்‌ இந்தியாவிலிருந்து மிருதங்கக்‌ கலைஞர்கள்‌ பலரும்‌ வந்து இவருடன்‌ சேர்ந்தும்‌ வாசித்துள்ளனர்‌.

 

அவர்களுள்‌ மதுரைராஜப்பா, அம்பல்ராமச்சந்திரன்‌, சுப்பராமபாகவதர்‌, மதுரை நடராஜஜயர்‌ போன்றவர்கள்‌ குறிப்பிடக்‌ கூடியவர்கள்‌. மயில்வாகனம்‌ அவர்கள்‌ இந்தியாவிலிருந்து வந்த பாடகிகளான வி. பி. ராஜேஸ்வரி, எம்‌. கே. சமலகுமாரி, மைதிலி போன்றவர்களுக்கும்‌. வாசித்திருக்கிறார்‌ ஏன்பது குறிப்பிடத்தக்கது..

 

இவர்‌ ஏறக்குறைய 50 வருடங்கள்‌ வரையில்‌, மிருதங்கம்‌ முதலான லய வாத்தியங்கள்‌ வாசித்‌துள்ளார்‌. அத்துடன்‌ தானே பாடிக்கொண்டு ஏக காலத்தில்‌ மிருதங்கத்தையும்‌ வாசிக்கும்‌ சாதுரியம்‌ இவரிடம்‌ இரு.ந்தது. இதனாலும்‌ இவருடைய வாக்திபம்‌ சிறப்படைந்தது. இவருடைய மிருதங்க வாசிப்பு ௮க்காலத்திருந்த இந்திய ராஜபாட்‌ நடிகர்‌ விஸ்வநாத்தாஸ்‌ அவர்களால்‌ பெரிதும்‌ கவரப்பட்டது.

 

யாழ்ப்பாணத்து நாடக அரங்கில்‌ மயில்வாகனம்‌ அவர்களுக்கு கோடையிடி மயில்வாகனம்‌” என்னும்‌ பட்டம்‌ விஸ்வநாத்தாஸ்‌ அவர்களால்‌ அளிக்கப்பட்டது. அன்று முதல்‌ கோடையிடி மயில்‌வாகனம்‌ ஏன்ற பெயர்‌ வழக்கத்திற்கு வந்தது. தொடர்ந்தும்‌ கலைச்சேவை புரிந்து முன்னேற்றம்‌ பெற்றார்‌.

 

கோடையிடி மயில்வாகனம்‌ அவர்கள்‌ வாத்தியங்கள்‌ சீர்செய்யும்‌ வேலைகளிலும்‌ சிறந்து விளங்கினார்‌. இவருக்கு மிருதங்கத்தில்‌ சில சிஷ்யர்களும்‌ இருந்தார்கள்‌ என இவருடைய புதல்‌வர்களுள்‌ நாகராஜா, கதிரமலை, கந்தசாமி ஆகியோரும்‌ மிருதங்கக்‌ கலைபமின்று ஓரளவு வாசிக்கலானார்கள்‌.

 

எனினும்‌ கந்தசாமி என்பவர்‌ கர்நாடக இசைபம்பாணியில்‌ மிருதங்கம்‌ வாசிக்க வேண்டும்‌ என்ற ஆவலினால்‌ கோடையிடி தம்பா பிள்ளையின்‌ புதல்வரான அண்மையில்‌ அமரத்துவமடைந்த கலாகூரி த. இரத்தினம் பிள்ளை அவர்களிடம்‌ முறைப்படி மிருதங்கம்‌ பயின்று இசையரங்குகளில்‌ மிருதங்கம்‌ வாசித்தும்‌, பல மாணவர்களை உருவாக்கி அரங்கேற்றம்‌ செய்துள்ளார்‌ என்பதும்‌ குறிப்பிடத்தக்கது.

 

கலைஞரின் இறப்பு

இவ்வகையில்‌ ஈழத்தில்‌ கலைச்சேவை புரிந்த மயில்வாகனம்‌ அவர்கள்‌ நோயற்ற காரணத்தினால்‌ 25-04-1960 இல்‌ கலையூலகை நீத்தார்‌. இவருடைய குருபரம்பரை வழிவந்த பேரர்‌களும்‌ மிருதங்கக்‌ கலையில்‌ பயிற்சி பெற்றவராக தற்போது ஜெர்மனி போன்ற நாடுகளில்‌ மிருதகக்கலையை வளர்க்கின்றனர்‌. இது இவருடைய கலைத்‌ தொண்டினது சிறப்பின்‌ பிரதிபலிப்பு எனலாம்‌.

This post have 0 Comment

Comment your suggestion and review here!
EmoticonEmoticon

Next article Next Post
Previous article Previous Post