-->

Thursday, 19 August 2021

author photo

N. S. Uruthirapathy [1900 - 1980]

mavittapuram n.s. uruthirapathy, uruthirapathy, nathaswara kalaignar @lyricstamil.net
N. S. Uruthirapathy

N. S. Uruthirapathy was born on 1900 in Mavittapuram. He was a famous Nathaswaram musician in Yazhpanam.

திரு. உருத்திராபதி

இவர்‌ ஈழத்திருநாட்டின்‌ வடபகுதியில்‌ மூர்த்தி, ஸ்தலம்‌, தீர்த்தம்‌ மூன்றும்‌ ஒருங்கே அமையம்‌ பெற்ற மாவிட்டபுரத்தில்‌ 1900ஆம்‌ ஆண்டு ஏன்‌ சோமசுந்தரம்‌ தம்பதிகளுக்கு புதல்வனாகப்‌ பிறந்‌தார்‌.


இவரின்‌ மூத்ததமையனார்‌ திரு. பக்கிரி சாமிப்‌ பிள்ளை பிரபல நாதஸ்வர வித்துவானாக திகழ்ந்‌தார்‌. தம்பி நடராஜன்‌ பிரபலநாதஸ்வர வித்துவானாகவும்‌ இசையாசிரியராகவும்‌, நாடக இயக்குனராகவும்‌ திகழ்ந்தார்‌.


திரு. உருத்திராபதி அவர்கள்‌ தனது 4ஆவது வயதில்‌ தந்தையை இழந்தார்‌. இவரின்‌ தாயார்‌. தமது பிள்ளைகளைத்‌ திறமைமிக்க இசைக்கலைஞர்‌ ஆக்குவதில்‌ பட்ட இன்னல்கள்‌ எத்தனையோ அதைப்போல்‌ மூத்ததமையன்‌ பக்கிரிசாமிப்பிள்ளை அவர்கள்‌ குடும்பப்‌ பாரமும்‌ மற்றும்‌ எத்தனையோ இன்னல்களுக்கும்‌ மத்தியில்‌ திரு. உருத்திராபதி அவர்களை இந்தியாவில்‌ இசைக்கலை பயில அனுப்பி வைத்தார்‌.


இவரின்‌ முதல்‌ குருகுலவாசம்‌ சிதம்பரம்‌ நாஸ்வர வித்வான்‌ வைத்திய நாதனிடம்‌ அமையப் பெற்றது. அந்தக்‌ காலத்தில்‌ குருகுலவாசம்‌ எத்தனையோ இன்னல்களைத்‌ தாண்டிப்‌ பொறுமையுடன்‌ இருந்‌தால்‌ தான்‌ பயனளிக்கும்‌.


இக்காலத்திலோ இசைப்‌ பாடப் புத்தகங்களும்‌, இசைவகுப்புகளும்‌ இருப்பதால்‌ இன்றைய இசைமாணவர்களுக்குக்‌ குருகுலவாசகத்‌தில்‌ நிகழும்‌ இன்னல்கள்‌ இல்லை எனலாம்‌. இரண்டு ஆண்டுகள்‌ சிதம்பரம்‌ வைத்திய நாதனிடம்‌ நாதஸ்வரக்‌ கலையைக்‌ கற்று அன்னாரின்‌ ஆசியுடன்‌ ஊர்‌ வந்தார்‌.


பின்னும்‌ இந்தியாவிற்கு கொத்தமங்கலம்‌ தண்டாயுத பாணி என்னும்‌ நாதஸ்‌வர வித்வானிடம்‌ சென்றவர்‌ அங்கே மேலும்‌ 4 வருடங்கள்‌ நாதஸ்வரக்‌ கலையைப்‌ பயின்றார்‌. இவரின்‌ திறமையைக்‌ கண்ட குருநாதர்‌ அங்கே 20 மாணவர்களுக்கு ஆசிரியராக நியமித்து வகுப்‌புக்கள்‌ நடத்துவித்தார்‌.


3 ஆண்டுகள்‌ முடிவில்‌ ஊர்‌ திரும்ப விரும்பினார்‌. எனினும்‌ அன்னாரின்‌ குருநாதரோ வித்தையை மூர்த்தியாக்கிக்‌ கொண்டு போ என்றார்‌. ௮ந்த அன்புக்‌ கட்டளையை மீற முடியாது. மேலும்‌ ஒரு வருடம்‌ இருந்து பாடத்தைத்‌ தொடர்ந்தார்‌.


ஒருநாள்‌ குருநாதர்‌ அழைத்துதம்பி நான்‌ இளமையிலேயே நோயாளியாகி விட்டேன்‌. அதனால்‌ தனிக்‌ கட்டையாகவே இருக்கிறேன்‌ இது உனக்கே தெரியும்‌. எனக்கு மருமக்கள்‌ பலர்‌ இருக்கின்றனர்‌. ஆனால்‌ உன்னை என்‌ எடுப்புப்‌ பிள்ளையாக கருதி வருகிறேன்‌” என்றார்‌.


மேலும்‌, உனது அடக்கமான குணத்‌திற்கும்‌ புத்திசாதுர்யத்திற்கும்‌ யாழ்ப்பாணத்தில்‌ நீ முதல்தர வித்துவானாக விளங்குவாய்‌. இங்கு தமிழ்‌ நாட்டிலேயே நீ தங்கியிருந்தால்‌ உனக்கும்‌ பேரும்‌ புகழும்‌ உண்டாகும்”‌ ஏன்றார்‌.


ஆனால்‌ தாயார்‌, தமையனார்‌ விருப்படி செய்‌ என்றார்‌. இப்படி இருக்கும்‌ பொழுது குருநாதர்‌ இறையடி சேர்ந்துவிட்டார்‌ பிள்ளையில்லா இடத்துப்‌ பிரதம சீடன்‌ கொள்ளிக்கடன்‌ செய்யலாம்‌ என்பது குருகுலக்‌ கல்விமரபு. அதன்படி ஈமக்கடன்களை இவரே செய்துமுடித்து விட்டு யாழ்ப்பாணம்‌ வந்து சேர்ந்‌தார்‌.


முருகன்‌ கருணையும்‌ மூத்ததமையனாரின்‌ சிட்சையும்‌ அன்பும்‌ தாயாரின்‌ பாசமும்‌ ஊக்கமும்‌ குருநாதரின்‌ ஆசியும்‌, அருள்‌ வாக்கும்‌ தான்‌ அவரை இந்நிலைக்கு உயர்த்தியது என்று அடிக்கடி அவர்‌ கூறுவதுண்டு.


1927இல்‌ அளவெட்டி சாம்பசிவ நாதஸ்வர வித்துவானின்‌ மகளான யோகாம்பாளை விவாகம்‌ செய்தார்‌. இவரது சாதனைகளுக்கு உறுதுணை யாக அமைந்தார்‌ இவரது பாரியார்‌. இவருக்கு இரண்டு பெண்குழந்தைகள்‌ மூத்தவர்‌ இராஜமணி இளையவர்‌ தர்மவதி.


இவர்‌ தமது புதல்விகளுக்கும்‌ முறையாக இசைபயிற்றித்‌ தரமுள்ள இசை ஆசிரியர்களாக ஆக்கியுள்ளார்‌. இந்தியாவிலிருந்து பிரபல தவில்‌ வித்துவான்‌களை இலங்கைக்கு அழைத்து இசைக்கலா ரசிகர்களின்‌ இதய ஆவலை பூர்த்தி செய்த பெருமை இவருக்குண்டு.


தமக்கென ஒருபாணியைக்‌ கையாண்டு கர்த்தா ராகங்களை வாசிப்பதிலும்‌ இராகங்களை மத்திம சுருதிபண்ணி உருப்படி வாசிப்பதிலும்‌, பல்லவி, ஸ்வரங்களை வித்திமாசமான தாளங்களில்‌ சரளமாக வாசித்துக்‌ கலைஞர்களையும்‌ பாமர மக்களையும்‌ மகிழ்விப்பதிலும்‌ ஆற்றல்‌ பெற்றார்‌.


திரு. உருத்திராபதி அவர்கள்‌ நாதஸ்வர வித்‌துவானாக திகழ்‌ந்த போதும்‌ எல்லா வாத்தியங்‌களிலும்‌ தேர்ச்சி பெற்றிருந்ததோடு இசை ஆசிரியராகவும்‌ திகழ்ந்தார்‌. மாவை ஆதீனத்தில்‌ அர்த்த சாமப்‌ பூஜையின்போதும்‌, வெள்ளி, செவ்வாய்‌ நாட்களிலும்‌ நடேஸ்வராக்கல்லூரியில்‌ சரஸ்வதி பூஜையின்போதும்‌ புல்லாங்குழல்‌ வாசித்துள்ளார்‌.


விருதுகள்

ஏன்‌ மூச்சு மாவை முருகனுக்கே உரியது எனக்கூறி மாவை முருகனுக்கேக தனது நாதாஞ்சலியை அர்ப்பணித்து அங்கு ஆஸ்தான வித்துவானாகவும்‌ விளங்கினார்‌. இக்கலைஞரின்‌ தொண்டினைப்‌ பாராட்டி சிறந்த வித்துவானென அன்னாருக்கு இசைக்‌ கலாரசிகர்கள்‌ சார்பில்‌ மாவை ஆதின முதல்வர்‌ பிரம்ம ஸ்ரீ ச. துரைச்சாமிக்குருக்கள்‌ அவர்‌களால்‌ தங்க நாதஸ்வரம்‌ வழங்கப்பட்டது.


அநேக ரசிகர்களால்‌ தங்க மெடல்களும்‌ வழங்கப்பட்டன. 1964ஆம்‌ ஆண்டிலே அகில இலங்கை அரசினர்‌ இசை ஆசிரியர்‌ சங்கத்தால்‌சங்கீதவித்துவ மூஷணம்‌என்றபட்டமும்‌ 1965ஆம்‌ ஆண்டில்‌ அகில இலங்கை சங்கீதவித்துவ சபையினால்‌ பொன்‌னாடைபோர்த்தி சங்கீதவித்துவமணிஎன்னும்‌ பட்டமும்‌ வழங்கப்பட்டது.


யாழ்நகரில்‌ நடந்த இசை விழாவின்‌ போது இராமநாதன்‌. இசைக்கல்லூரியும்‌ பேராசிரியராக இருந்த சித்தூர்‌ சுப்பிரமணிய பிள்ளை இவருக்கு பொன்னாடைபோர்த்தியும்‌ பாராட்டினார்‌.


அன்னாரின் மறைவு

இவருடைய மாணவர்கள்‌ பலர்‌ நாதஸ்வர வித்துவான்‌௧ளாகவும்‌ பாடகர்‌ களாகவும்‌, இசையாசிரியர்களாகவும்‌ இசை ஆராய்ச்சி அறிஞர்‌களாகவும்‌ திகழ்கிறார்கள்‌. 1980ஆம்‌ ஆண்டு மே மாதம்‌ 24ஆம்‌ திகதி நாதஸ்வர வித்துவான்‌ உருத்திராபதி இம்‌ மண்ணுலகைவிட்டு விண்ணுல கெய்தினார்‌.


கலைக்குறிப்பு:

பாரதத்தில்‌ பவானி என்னும்‌ இடத்தில்‌. விநாயகர்‌ கலைமகளைப்‌ போல. கையில்‌ வீணையைக்‌ கொண்டும்‌ ஆந்திர மாநிலம்‌ ஸ்ரீ சைலத்தில்‌ விநாயகர்‌ குழலூதும்‌ நிலையிலும்‌ காணப்படுன்றார்‌.

This post have 0 Comment

Comment your suggestion and review here!
EmoticonEmoticon

Next article Next Post
Previous article Previous Post