-->

Friday, 10 September 2021

author photo

nallai aathinam, s.s mani bagavathar @lyricstamil.net
 Paramachariya Swamigal

S. S. Manibagavathar

இவர்‌ ஈழத்து யாழ்ப்பாணத்தின்‌ வண்‌ணை வைத்தீஸ்வரர்‌ தேவஸ்தானத்தின்‌ குழலில்‌ வாழ்ந்த பிரம்மஸ்ரீ செல்லையர்‌ தம்பதிகளுக்குப்‌ புத்திரராக 1919 ஆம்‌ ஆண்டு பிறந்தார்‌. இவருக்கு தந்தையார்‌ இட்ட பெயர சிவசுப்பிரமணிய ஐயர்‌ ஏன்பதாகும்‌. தந்தையார்‌ வண்ணை வைத்தீஸ்வரன்‌ கோவில்‌ முஜைப்பணி செய்து வரந்தவராவர்‌.

                                                                 

இவர்‌ இளமைமமில்‌ தனது கல்வியை வண்ணை வைத்தீஸ்வர வித்தியாலயத்தில்‌ பமின்றதுடன்‌, தமிழ்‌, சமஸ்கிருதம்‌, ஆங்கிலம்‌ ஆகிய மும்மொழிகளையும்‌ பயின்‌றார்‌. இக்காலத்தில்‌ அங்கே விசேடமாக சுவாமி விபுலானந்தா, சுவாமி அவிநாஸானந்தா, சுவாமி சர்வானந்தா, சுவாமி நிஸ்வேஸ்வரானந்தா ஆகிய தவப்பெரியேரர்களிடம்‌ பயின்றார்‌. மேலும்‌ யாம்‌ இந்துக்கல்லூரியில்‌ மேல்‌ வகுப்புகளைம்‌ பயின்‌ஜர்‌. எனினும்‌ இவருடைய விருப்பம்‌ இசையிலேயே இருந்து.

 

இதன்‌ காரணமாக தனது பதினெட்டாவது வயதில்‌ இசைகற்க ஆரம்மித்தார்‌. இதற்குக்‌ காரணமாக அமைந்தவை அக்காலத்தில்‌ சங்கானை சுவாமிகள்‌, உடுவை சங்கர சுப்பையர்‌ போன்றவர்களின்‌ கதாம்பிரச.ங்களே இசை விரிவுரைகள்‌ எனலாம்‌.

 

ஞானம்‌

மணி ஐயர்‌ அவர்கள்‌ சித்திரம்‌, இசை, நாடகம்‌, என்பவற்றில்‌ இயற்கையாகவே ஞானம்‌ பெற்றவராய்‌, இசைப்‌ பயிற்சியினை இராசுப்மிள்ளை ஓதுவாரிடம்‌ பயின்றவராய்‌, கதாகாலகேகஷேபங்‌களைம்‌ பக்கவாத்திய சகிதம்‌ நிகழ்த்த ஆரம்‌மித்தார்‌. இவருடைய முதல்‌ நிகழ்ச்சியானது வண்ணை வைத்தீஸ்வர தேவஸ்தானத்தில்‌ 1938 இல்‌ இவருடைய பேரனார்‌ வித்துவான்‌ கணேச ஐயர்‌ முன்னிலையில்‌ நிகழ்த்தப்‌ பெற்றது. இந்றிகழ்‌ இவரின்‌ இசையார்வத்தின்‌ திருப்புமுனையாக அமைந்தது.

 

தொடர்ந்தும்‌ மணிஜஐயர்‌ அவர்கள்‌ ஈழத்தின்‌ பல இடங்களிலும்‌, தேவஸ்தானங்களிலும்‌ நிகழ்ச்சிகள்‌ பல செய்து வந்தார்‌. இக்காலப்பகுதிமில்‌ வண்ணை காமாட்சி சுந்தரம்‌, மீனாட்சிசுந்தரம்‌ அவர்களே இவருக்கு மிருதங்கம்‌, கஞ்சீரா போன்ற வாத்தியங்களைப்‌ பக்கவாத்தியமா கவாசித்து, மேற்‌கூறப்பட்ட நிகழ்ச்சிகளைச்‌ அிறப்புறச்‌ செய்தார்‌கள்‌.

 

மேலும்‌, ஐயர்‌ அவர்கள்‌ தனது இசைஞானத்‌தினை மேம்படுத்திச்‌ சிறப்பாக சங்கீத உபந்நியாசங்கள்‌ வழங்கியும்‌, சமகாலத்தில்‌ வட்டுக்கோட்டை மாழ்ப்பாணக்கல்லூரியில்‌ ஆசிரியராக நியமனம்‌ பெற்றும்‌, வாய்ப்பாட்டு, வாத்தியம்‌, நடனம்‌ ஆகிய இசைகளை மாணவர்களுக்கும்‌ பயிற்றி வந்தார்‌.

 

மேலும்‌ நாடகக்‌ கலைஞராகவும்‌ பாத்திரம்‌ ஏற்றுப்‌பாடியும்‌, நடித்தும்‌ கலையை வளர்த்து வந்தார்‌. இக்கரலம்பகுதியிலேயே இவருக்குத்‌ திருமணம்‌ நிகழ்ந்தது. இதன்‌ பயனாக புதல்வன்‌ ஒருவரைப்‌ பெற்றார்‌. முருகானந்தம்‌ என்னும்‌ பெயரையும்‌ அப்புத்திரனுக்கு கூட்டினார்‌.

 

மணி ஐயர்‌ அவர்கள்‌ மதுரை ஆதீனத்திற்குச்‌ சென்று ௮ங்கே பல இசையரங்குகளில்‌ கதாப்பிரசங்கங்கள்‌ செய்து சிறப்புப்‌ பெற்றார்‌. இவ்வேளைமில்‌ ஆதினமுதல்வர்‌ “முத்தமிழ்‌ மணி” ஏன்னும்‌

 

பட்டத்தினை அளித்தார்‌. அன்று தொடக்கம்‌ இவர்‌ பெயர்‌ மணிபாகவதர்‌ஏன்று வழங்கலாயிற்று. மேலும்‌ இவர்‌ கொழும்பில்‌ ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சும்மிரமணிய தேவஸ்தானத்திலும்‌ இன்னிசை விரிவுரைகள்‌ பலவற்றைத்‌ தொடர்ந்து வழங்கி பாராட்டுகளையும்‌ பொற்கிளிகளையும்‌ பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 

இவருக்கு அமைந்த இசை, வாத்திய, நடன அறிவினைப்‌ பயன்படுத்தி தனக்கென சிலபக்கவாத்‌தியங்களை மிருதங்கம்‌, வயலின்‌, ஆகியனவற்றில்‌ தயார்‌ செய்து நிகழ்ச்சிகள்‌ பல வழங்கி இசையையும்‌ தன்னையும்‌, வாத்தியக்காரர்களையும்‌ மேம்‌படுத்திக்‌ கொண்டார்‌. இவர்‌ இலங்கை வானொலிமிலும்‌, ஈழத்தின்‌ பல பாகங்களிலும்‌ இந்தியா, மலேசியா, சிங்கப்பூர்‌ போன்ற பல நாடுகளிலும்‌ எண்ணற்ற கதாகாலகக்ஷ்பங்களை நிகழ்த்தியுள்ளார்‌.

 

இவ்வகையில்‌ மலேசியா நாட்டில்‌ மட்டும்‌ 180 தினங்களில்‌ 150 நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்‌. இந்நிகழ்வு இவரின்‌ இசைச்சிறம்பி.ற்கு சான்றாகும்‌. இசையையும்‌, சமயதர்மத்தையும்‌ வளர்த்து வந்‌துள்ள இவருக்கு 1960இல்‌ மலேசியா தமிழ்‌ இலக்‌கிய மஹா நாட்டில்‌ “கதாகாசேபகலாநிதிஎன்ற பட்டம்‌ அளிக்கப்பெற்றது.

 

மணிபாகவதர்‌ அவர்களுடைய நிகழ்ச்சிகள்‌ எப்பொழுதும்‌ வி.நாயகர்‌ கீர்த்தனையூடன்‌ ஆரம்பிக்‌கும்‌. இவருடைய நிகழ்ச்சிகள்‌ தனித்துவமுடையது. அதாவது இசையின்‌ கருதிலயநுட்பம்‌, மதிநுட்பம்‌ ஏன்பவை சிறப்பானவை ஆகும்‌. தகுந்த இடங்களில்‌ ராகவிரிவு, ஸ்வரங்கள்‌, பல்லவிதிரிகாலம்‌, நிரவல்‌, ஸ்தாயி, வேறுபாடுடைய திருப்புகழ்‌ போன்றவைகளின்‌இசைநுட்பங்களைப்‌ பிரயோகித்து நிகழ்ச்சிகளையும்‌, பங்குபற்றும்‌ வாத்தியக்காரர்களையும்‌, ரசிகர்களையும்‌ சிறப்பித்து விடுவார்‌.

 

குறிப்பாக 1970 ஆம்‌ அண்டு நல்லூரில்‌ நடைபெற்ற அண்ணாமலை இசைத்தமிழ்‌ மன்ற இசைவிழாவில்‌ தமிழ்‌ இசையின்‌ இனிமைதனை நாமறிவோம்என்னும்‌ பல்லவியை வின்யாசம்‌ செய்து யாவரையும்‌ வியக்‌கச்செய்தார்‌. இது இவருடைய இசையின்‌ பாண்டித்‌தியதிற்குச்‌ சான்றாகும்‌.

 

மணிபாகவதர்‌ அவர்களுடைய நிகழ்ச்சிகளுக்கு ஸ்ரீ.வைத்திய நாதசர்மா, திரு, சண்முகானந்தம்‌, திரு. சித்திவினாயகம்‌, திரு. கண்ணன்‌, திரமதி ஞானம்பிகை பத்மசிகாமணி ஆகியோர்‌ வயலினையும்‌, திரு. ஆறுமுகம்‌ பிள்ளை, திரு. பிச்சையம்பா ஆகியோர்‌ முகவீணையும்‌  திரு. ஆ. நமசிவாயம்‌, திரு. அரியநாயகம்‌ ஆகியோர்‌ பூல்லாங்குழலையும்‌, மதுரை கிருஷ்ண ஐயர்‌, ஸ்ரீ. கணேசசர்மா, திரு. கணபதியாமிள்ளை,திரு. தங்கம்‌,திரு. ஆத்மானந்தா திரு. இராஜன்‌ ஆகியோர்‌ மிருதங்கம்‌, கஞ்சிரா, ஆகிய வாத்தியங்களையும்‌ வாசித்தவர்களாவர்‌.

 

இக்கலைஞர்‌ சிறப்பான பட்டங்கள்பற்பல பெற்றவராம்‌ காவிஉடையுடுத்தித்‌ தவக்கோலம்‌ பூண்டு, சுவாமி. நாததம்பிரான்‌ சுவாமிகள்‌ என்னும் திருநரமத்‌துடன்‌ இசை அருளுரை ஆற்றினார்‌. 1966 ஆம்‌ ஆண்டு நல்லை திருஞானசம்பந்தர்‌ ஆதீனத்தை ஆரம்‌பித்து ஆதீனத்தின்‌ வளர்ச்சிக்காக தனது நிகழ்‌வுகளில்‌ கிடைக்கும்‌ வருமானத்தைச்‌ செலவு செய்தும்‌ தெய்விக மஹாநாடுகள்‌ பலவற்றையும்‌, தெய்வீக இசை விழாக்களையும்‌ தனது ஆதீன கலாமண்டபத்‌தில்‌ நிகழ்த்தி, சமயத்தையும்‌ பக்தி இசையையும்‌ வளர்த்து அரும்பணிகள்‌ பரிந்து வந்தார்‌.

 

இதன்‌ பேறாக முன்னேற்றம்‌ கண்ட இசைக்கலைஞர்கள்‌ பலர்‌. இவருடைய நிகழ்ச்சி இறுதியாக வண்ணை வைத்தீஸ்வரன்‌ கோவிலில்‌ நிகழ்ந்தமை குறிப்பிடத்‌தக்கதாகும்‌. தம்பிரான்‌ சுவாமிகள்‌ இந்துதர்மத்தையும்‌, இசைமினையும்‌ குறிப்பாகத்‌ தமிழையும்‌ முன்‌னெடுத்தவராய்‌ 1981 ஆம்‌ ஆண்டு பங்குனி உத்தர நட்சத்திரத்தில்‌ சமாதி.நிலை அடைந்தார்‌. இவர்‌ பணியை முன்னெடுப்பதற்காக ஏற்கனவே சோசுந்தரபரமாச்சாரிய சுவாமிகளையும்‌ தகுதியாக்கினார்‌. அவர்பணி தொடர்கிறது.

 

நித்தியானந்தசர்மா

சுவாமிகள்‌ அவர்கள்‌ தனது இசை, பண்‌ விரிவுரை என்பவற்றை முன்னெடுத்து செல்வதற்காக தனது பூர்வாச்சிரமத்தில்‌ திரு. சப. கணேசசுந்தரன்‌ அவர்களையும்‌, அடுத்து சுவாமிகள்‌ நிலையில்‌ மிரம்மஸ்ரீ சிவ. வை. நித்தியானந்தசர்மா அவர்‌களையும்‌ தயார்‌ செய்து தந்துள்ளார்கள்‌. இவர்‌கள்‌ மூலமாக இசைம்பணி தொடர்கிறது. வளர்‌கிறது என்பதில்‌ சந்தேகமிலினவ்றோ!!

This post have 0 Comment

Comment your suggestion and review here!
EmoticonEmoticon

Next article Next Post
Previous article Previous Post