-->

Wednesday, 1 September 2021

author photo
n.kamatchisundaram, thavil, tamil artists @lyricstamil.net
N. Kamatchi Sundaram


N. Kamatchi Sundaram (1906 – 1944)

ஈழத்து தவில்‌ வித்துவானாகிய காமாட்சி சுந்தரம்‌ அவர்கள்‌ யாழ்ப்பாணத்து வண்ணார்‌ பண்ணை நாகலிங்கம்‌ தம்பதிகளுக்கு 1906ஆம்‌ ஆண்டு பிறந்தார்‌. இவரின்‌ இளமைக்‌ காலத்தில்‌ ஆரம்பக்‌ கல்வியைத்‌ தொடர்ந்து, இசைக்கு ஆரம்ப சிட்சையான தாளம்‌ போடும்‌ பயிற்சியில்‌ ஈடுபட்டார்‌. தமையனாரான சின்னத்துரை உபாத்தியாயரிடம்‌ சிட்சை பெற்றார்.‌

 

திரு. காமாட்சிசுந்தரம்‌ அவர்களுடைய மூத்த சகோதரர்‌ தவில்‌, மிருதங்கம்‌, கடம்‌ போன்ற லய வாத்தியங்களை வாசிக்கும்‌. திறமையுடையவராகத்‌ திகழ்ந்தார்‌. இவரை சின்னத்துரை உபாத்தியாயர்‌என அழைப்பார்கள்‌.


 Yazhpana Kalaignargal: Rathinam Miruthangam


சகோதரருடன்‌ சேர்ந்து காமாட்சி சுந்தரம்‌ அவர்கள்‌ தவில்‌, கஞ்சிரா போன்ற வாத்தியங்களைக்‌ கற்று வாசிக்கவும்‌ ஆரம்பித்தார்‌. இவருடைய தவில்‌, கஞ்சிரா வாசிப்பு லயக்கணிசம்‌ நிரம்மியது என்று குறிப்பிடுவார்கள்‌. இவரும்‌ சகோதரரும்‌ தவில்‌ வாசிக்கும்‌ காலத்தில்‌ இவர்கள்‌ மைத்துனர்களான வைரவ நாதன்‌, அண்ணசச்சாமி ஆகியோர்களின்‌ நாதஸ்வர, இசை அரங்குகளில்‌ சிறப்புத்தவில்‌ வாசித்து நாதஸ்‌வரத்தையும்‌ சிறப்படையதாக்கினார்கள்‌.

 

திரு. காமாட்சிசுந்தரம்‌ ௮வர்களின்‌ தவில்‌ வாசிப்பின்‌ சிறப்பினால்‌ இந்தியாவின்‌ தமிழ்நாட்டுக்‌ கலைஞர்‌ நாதஸ்வரசக்கரவர்த்தி திருவாவடுதுறை ரி. என்‌. ராஜரத்தினம்பிள்ளை அவர்களுக்கு தவில்‌ வாசிக்கும்‌ பேறினைப்‌ பெற்று இந்திய இசையுலகின்‌ நன்மதிப்பும்‌ பாராட்டும்‌ பெற்றார்‌.

 

மேலும்‌ திருவீழிமிழலை சுப்பிரமணியம் பிள்ளை அவர்களது நாதஸ்வரத்திற்கும்‌ சிறப்பாகத்‌ தவில்‌ வாசித்து வரலானார்‌. அக்காலத்தில்‌ இவருடைய சிறப்புக்‌ காரணமாக இந்தியாவில்‌ ஓர்‌ மீனாட்சி சுந்தரம்‌ இலங்கையில்‌ ஓர்‌ கரமாட்சி சுந்தரம்‌ ஏன்ற அளவில்‌ இவரின்‌ தவில்‌ வாசிப்பின்‌ வித்வச் சிறப்புக் கணிக்கப்பட்டது. அத்துடன்‌ நல்ல புகமுடன்‌ ரசிகர்‌களைக்‌ கவர்ந்த காமாட்சிகந்தரம்‌ இலங்கை வந்து யாழ்ப்பாணம்‌ முருகையா என்பவருடைய நாதஸ்வர இசைக்குத் தொடர்ந்து தவில்வாசித்து சிறப்பற்‌றார்‌.

 

இவர்களின்‌ இசை நிகழ்வுகளில்‌ முக்கியமாக கோவில்‌ உற்சவ வீதிபவனியின்‌ போது வடக்கு வீதியில்‌ தவிற்‌ சமா” என்று செல்லப்படுகின்ற தனியாவர்த்தனம்‌ இடம்‌பெறும்‌. இந்‌நிகழ்ச்சியில்‌ மணிக்‌கணக்கில்‌ ரசிகர்கள்‌ பொறுமையாக அமர்ந்து பார்த்தும்‌ கேட்டும்‌ ரசித்து மெய்மறந்த நிலையை எய்துவார்கள்‌.


Yazhpana Kalaignargal : Uruthirapathy


தவிற்சமா என்ற நிகழ்ச்சியில்‌ லய வேலைப்பாடுகள்‌, ஜனரஞ்சக நுட்பங்கள்‌ அமைந்தனவாக வாசிப்பது வழக்கம்‌. இப்படியான தவிற்‌ சமாவை ரசிக்கின்ற தன்மை யாழ்ப்பாண ரசிகர்களிடமேயுண்டு என்றே கூறலாம்‌. இதுவே நாதஸ்வர தவில்‌ கலை வளர்ச்சிக்கும்‌ ஒரு காரணமாகும்‌.

 

திரு. காமாட்சிகந்தரம்‌ ௮வர்களின்‌ தவில்‌ வாசிப்பின்‌ புகழ்‌ ஈழத்தில்‌ மட்டுமல்லாமல்‌ இந்தியாவின்‌ பல இடங்களிலும்‌ பரவியது. நன்மதிப்பும்‌ பெற்றிருந்தது. இது மட்டுமின்றி கஞ்சிரா வாசிப்பிலும்‌ நல்ல பாண்டித்தியம்‌ பெற்றவராக இசையரங்குகள்‌ பலவற்றில்‌ பங்குகொண்டு நிகழ்ச்சிகளைச்‌ சிறப்பித்து வந்தார்‌.

 

இவருடைய கலை வாரிசாக கலை பயின்றவர்கள்‌ பலராவார்‌. அவர்களுள்‌ காலஞ்சென்ற லய ஞானகுபேரபூபதி வி. தட்சணாமூர்த்தி, இசையரசு சின்னப்பழனி ஆகியோர்‌, தவில்‌ கற்று பெரும்‌ சிறப்புப்‌ பெற்றவர்கள்‌. அக்காலத்திலே கஞ்சிராவைப்‌ பயின்றவரான திரு. எம்‌. என்.‌ செல்லத்துரை அவர்கள்‌ மிருதங்கம்‌ கஞ்சிரா என்பவற்றில்‌ பல காலம்‌ இசைச்சேவை புரிந்து மிருதங்கமணி என்ற விருது பெற்ற முதுகலைஞர்‌ ஆவர்‌. இவரே அக்காலத்தில்‌ ஆரம்பிக்கப்பட்ட நந்தி இசை மன்ற ஸ்தாபகராகவும்‌ திகழ்பவர்‌.


இவ்வாறு நற்கலைத்தொண்டு ஆற்றியும்‌ கலைப் பரம்பரைகளை உருவாக்கியும்‌ ஈழத்தில்‌ இசைமரபு வளர ஓரளவு காரணம யிருந்த காமாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள்‌ தனது மிக இளமைக்‌ காலத்திலே, 1944ஆம்‌ ஆண்டு இவ்வுலகை நீத்து உம்பருலகெய்தினார்‌. இவருடைய பிள்ளைகளும்‌ தவில்‌ வாசிப்பில்‌ ஈடுபட்டு வருகின்றனர்‌. அவர்‌களுள்‌ திரு. கா. குகன்‌ என்பவர்‌ இன்னும்‌ தவிற கலையில்‌ பணியாற்றி வருபவராவர்‌. அமரர்‌ காமாட்சி சுந்தரம்‌, வகுத்த தவிற்பாணி தன்னிகரில்லாதது.

This post have 0 Comment

Comment your suggestion and review here!
EmoticonEmoticon

Next article Next Post
Previous article Previous Post